மதுரையில் சிறையில் இருந்து தப்பியோடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி பிடித்து கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமாா் (வயது 49). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அருண்குமாரை அடைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அருண் குமார் சிறையில் இருந்து சாமர்த்தியமாக தப்பி ஓடினார். இதையடுத்து, காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போது, திருப்பூரில் அருண்குமார் பதுங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை உடனடியாக கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். சிறைவாசம் வேண்டாம் என தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை கிடைத்து விட்டதே என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








