உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெறும் 20 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு.
வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி உலக ஹாக்கி கூட்டமைப்பின், மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்புகள் சமீப காலமாக வெளியாகி வந்த நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெறும் 20 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரும் ஜூலை 1 ஆம் தேதி துவங்கும் ஹாக்கி தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், A குழுவில் நெதர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சிலி, B குழுவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, சீனா, C குழுவில் அர்ஜென்டினா, ஸ்பெயின், கொரியா, கனடா, D குழுவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜப்பான், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தன் குழுவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிடும்.
அதன்படி, இந்திய மகளிர் ஹாக்கி அணி, வரும் ஜூலை 3 ஆம் தேதி இங்கிலாந்து அணியையும், ஜூலை 5 ஆம் தேதி சீனாவையும், ஜூலை 7 ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், எதிர் கொள்கிறது. இந்நிலையில் 20 பேர் கொண்ட இந்திய அணியை தற்போது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய அணி பின்வருமாறு:
கோல்கீப்பர்கள்: சவிதா (சி), பிச்சு தேவி கரிபம்
டிஃபெண்டர்கள்: டீப் கிரேஸ் எக்கா (விசி), குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா
மிட்பீல்டர்கள்: நிஷா, சுசீலா சானு புக்ரம்பம், மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சோனிகா, சலிமா டெடே
முன்கள வீரர்கள்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், ஷர்மிளா தேவி
மாற்று வீரர்கள்: அக்ஷதா அபாசோ தெகலே, சங்கீதா குமாரி
ஜூலை மாதம் 1 ஆம் தேதி துவங்க உள்ள ஹாக்கி போட்டிகள் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.