முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுபவர், சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் அவர் காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

அதை ஜாக்குலின் வழக்கறிஞர் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது படுக்கையறையில் இருந்தவாறு சுகேஷ் கன்னத்தில், ஜாக்குலின் கொடுக்கும் செல்ஃபி முத்த புகைப்படம், இந்தி திரையுலகில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஜாக்குலினும் சுகேஷும் நான்கு முறை சென்னையில் சந்தித்துள்ளனர். இதற்காக தனி விமானத்தை சுகேஷ், அவருக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கோரிக்கை நிறைவேறியது: அரசுக்கு பனை தொழிலாளர்கள் நன்றி

Gayathri Venkatesan

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை உயிரிழப்பு

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

Halley Karthik