முக்கியச் செய்திகள் சினிமா

மைக் டைசனுக்கு விஜய் தேவரகொண்டாவின் ’லைகர்’ படக்குழு பார்ட்டி!

மைக் டைசனுடன் நடந்த படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ‘லைகர்’ படக்குழு அவருக்கு சிறப்பு பார்ட்டியை கொடுத்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படம், லைகர் (Liger). விஜய் தேவரகொண்டா, இந்தி நடிகை அனன்யா பாண்டே ஜோடியாக நடிக்கின்றனர். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், அலி பாஷா, மார்கண்ட் தேஷ்பாண்டே, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மணி சர்மா இசை அமைக்கும் இந்தப் படத்தை புரி ஜெகநாத்துடன் நடிகை சார்மி, இந்திப் பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆக்ஷன், திரில்லர் படமான இதில், குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து மைக் டைசனுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படக்குழு சிறப்பு விருந்து கொடுத்துள்ளது. அப்போது படக்குழுவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், மைக் டைசன், அவர் மனைவி கிகி டைசன், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, சார்மி, புரி ஜெகன்நாத் மற்றும் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பிளஸ் டூ மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் போக்சோவில் கைது

Saravana Kumar

திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்

Gayathri Venkatesan

கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

Jeba Arul Robinson