அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின்…

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று கூடியது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுக. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார்.

அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு, அந்தப்பதவி காலியாக இருந்து வந்த நிலையில், தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.