சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டி…?

தமிழ் நாடு சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தலில் தவெக சார்பில் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள ஆதரவின் மூலம் அக்கட்சி பெரும்பான்மையையும் பெற்றது. இதனையடுத்து நேற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.

அடுத்ததாக இன்று நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நாளை சட்டமன்றத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தவெக சார்பில் ஆயிரம் விளக்க தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகரன் போட்டியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.