GOLD RATE | சவரனுக்கு ரூ. 400 குறைந்த தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.

தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 14, 150-க்கும் ஒரு சவரன் ரூ. ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280-ம் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50-ம் சவரனுக்கு ரூ. 400 -ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும் ஒரு சவரன் ரூ.1.12.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.