சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!

சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடியது. இதனிடையே சபாநாயகர் தேர்தலில், ஆளும் கட்சியான தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் தவெக எம்.எல்.ஏ. ரவிக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் ஜேசிடி பிரபாகரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார்.

சட்டசபை துணை சபாநாயகராக பட்டியலினத்தை சேர்ந்த ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்ய முதலமைச்சர் விஜய் முன்மொழிய அமைச்சர் என் ஆனந்த் வழிமொழிந்தார். இந்த நிலையில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.