சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14 ஆயிரத்து 100-க்கும். சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை போல் வெள்ளியும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.







