முக்கியச் செய்திகள் விளையாட்டு

அசத்திய கூல் கேப்டன்; இறுதிப்போட்டியில் சென்னை

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

14-வது ஐபிஎல் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி சுற்றுக்கான தகுதி போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இதில் வெற்றியடையும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதிபெறும். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி வெளியேறியது. இந்நிலையில் தற்போது தோனி தலைமையிலான சென்னை அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

இதனால் இந்த போட்டி கடும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது. தொடக்கத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை சென்னை அணி தேர்வு செய்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதனையடுத்து இறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் 35 பந்துகளில் 51 விளாசினார். முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் கெய்க்வாட் 50 பந்துகளில் 70 ரன்களையும், உத்தப்பா 44 பந்துகளில் 63 ரன்களையும் குவித்தனர்.

இறுதியாக 6 விக்கெட் விழுந்திருந்த நிலையில், கூல் கேப்டன் தோனி களமிறங்கினார். ஏறத்தாழ ஒவ்வொரு பந்துகளுக்கும் 2க்கும் அதிகமான ரன்கள் தேவையிருந்தது. இந்நிலையில் கடைசி மூன்று பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு பந்து வொய்ட்-ஆக போனது. அடுத்த பந்தில் தோனி பவுண்ட்ரி விளாச சென்னை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி அறிவிப்பு

Ezhilarasan

மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த நண்பனுக்கு சரமாரி வெட்டு!

Jayapriya

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!

Jayapriya