தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மதியம் 11 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் காலை 11 மணி வரை அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







