இந்தியாவில் பரவலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த நாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 20ல் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று நாடு முழுவது மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் வரிசையில் காத்திருந்து இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் இனிப்புக் கடைகளிலும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் ஆங்காங்கே புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.







