சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது ஆளுநர் பார்த்து பொன்முடி
கைகாட்டியது பெரிய தவறு என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது
பேசிய அவர், தற்போது எதிர்க்கட்சிகள் இந்தத்துவாவைத் தேர்தல் நேரத்தில் மட்டும்
பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரங்களில் தலையில் டர்பன் கட்டுவது, பூணூல்,
கோவில் போன்றவை நியாபகம் வருகிறது. கோவிலுக்குப் போக வேண்டாம் என்று
கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோவிலுக்குச் செல்கிறார்கள். மக்களை
முட்டாளாக்குகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநர் விஷயத்தில் தமிழகத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. திமுக ஒரு
அரசாங்கம் நடத்துகிறீர்கள், அதற்கு மேல் கவர்னர் இருக்கிறார். அந்த
அரசாங்கத்தை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கும் ஆளாக
ஆளுநர் இருக்கிறார்.
சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி ‘போயா’ என
கைகாட்டுகிறார். பொன்முடி செய்தது பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பேருந்தில்
ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார்.
தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர்
கே.எஸ்.அழகிரி சொல்லியிருக்கிறார். அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை.
காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதால் அதுபற்றி
பேசுவது இல்லை. ஆளுநருக்கு எதிராக கோஷம் போடும்போது மக்கள் பார்ப்பார்கள்
என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள்” என தெரிவித்தார்.