முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நெய்வேலி விவகாரத்தில் தனக்கு மட்டும் அக்கறை இருப்பதாக அன்புமணி பேசுவது தவறானது: அதிமுக எம்எல்ஏ

நெய்வேலி விவகாரத்தில் தனக்கு மட்டும் அக்கறை இருப்பதாக அன்புமணி பேசுவது கண்டனத்திற்குரியது என புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் குற்றம் சாட்டியுள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 09) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதன்படி சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சினிமா ,விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளைளில் மறைந்த பிரபலங்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன், நெய்வேலி பகுதி மக்களின் கோரிக்கையை குறித்து குழு அமைக்கப்படும் என அறிவித்த திமுக, தற்போது வரை அமைக்கவில்லை என குற்றம் சாட்டினார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கொடுத்தவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் பேசினார்.

மேலும் நெய்வேலி விவகாரத்தை பாமக தான் கையில் எடுத்து குரல் எழுப்பி வருவதாக கூறுவது தவறான பேச்சு எனவும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக அதிமுக விளங்குவதாகவும் அருண் மொழி தேவன் பேசினார். தனக்கு மட்டுமே அக்கறை இருப்பதைப் போல அன்புமணி பேசுவது கண்டத்துக்குரியது எனவும் வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என தெரியாமல் அன்புமணி இருப்பதாகவும் அருண்மொழி தேவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

EZHILARASAN D

குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!

Arivazhagan Chinnasamy

குடியரசு தின அலங்கார ஊர்தி: மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Arivazhagan Chinnasamy