ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – விரட்டியடித்த வனத்துறை

கேரளாவில் திடீரென ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம், வெளியேற வழி தெரியாமல் ஊரில் உள்ள அனைத்து தெரு வழியாக யானை வலம் வந்ததால் அலறி அடித்து வீட்டுக்குள் பொதுமக்கள் தஞ்சம் புகுந்தனர். கேரளா மாநிலம்…

கேரளாவில் திடீரென ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம், வெளியேற வழி தெரியாமல் ஊரில் உள்ள அனைத்து தெரு வழியாக யானை வலம் வந்ததால் அலறி அடித்து வீட்டுக்குள் பொதுமக்கள் தஞ்சம் புகுந்தனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தோனி பகுதியில் இன்று அதிகாலை ஒரு குட்டி யானை உட்பட மூன்று யானைகள் அங்கு உள்ள தோட்டத்தின் வழியாக வலம் வந்தது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் யானை பாதை தெரியாமல் திடீரென ஊருக்குள் உள்ளே புகுந்தது. வெளியேற வழி தெரியாமல் ஊரின் உள்ள அனைத்து தெரு வழியாக யானை வலம் வந்ததால் யானை கூட்டத்தைக் கண்ட அங்கிருந்த மக்கள் அலறியடித்து வீட்டுக்குள் சென்று தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் கூச்சலிடவே யானை அங்கிருந்து வெளியேறி பின்னர் வனப் பகுதிக்குள் சென்று விட்டது.

தொடர்ந்து இந்த கிராமத்தில் யானை வராமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பல மாவட்டங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவது அம்மக்களை மிகவும்அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.