முக்கியச் செய்திகள் தமிழகம்

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்

சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவுக்கு, சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் பங்களா உள்ளது. 49 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பங்களாவின் மதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். பங்களாவில் முடக்கப்பட்டதற்கான 11 பக்கங்கள் கொண்ட நோட்டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டி சென்றனர்.

வருமானத்திற்கு மேல், பினாமி பெயரில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கியதாக சசிகலா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சசிகலாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு உட்பட ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை, வருமான வரித்துறையினர் முடக்கினர்.தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கப்பட்டுள்ளது. இதுவரை சசிகலாவிற்கு சொந்தமான ரூ. 2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முடக்கப்பட்டுள்ள பையனூர் நிலம் தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்கப்படும்! – அமைச்சர் செங்கோட்டையன்

Nandhakumar

பிரசித்தி பெற்ற கோவை சாய்பாபா கோவிலில் 78வது வருட மகா தரிசன விழா!

Niruban Chakkaaravarthi

சபாநாயகராக அப்பாவு அதிகாரப்பூர்வமாக தேர்வு!