முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுத்துறை, சாரண, சாரணியர், கலைத்துறை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய ரயில்வேயில் நிரந்தரப் பணி வழங்கப்படுகிறது. அதன்படி, விளையாட்டுத்துறையில் தடகளத்தில் சாதனை புரிந்த மதுரையைச் சேர்ந்த வீரமணி ரேவதிக்கு மதுரை ரயில்வே கோட்டத்தில் Clerk பணி வழங்கப்பட்டது.

அவர் சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் பிரிவில் பங்கேற்றதால் அவரை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய விகிதம் மூன்றாம் நிலையில் இருந்து ஆறாம் நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ரேவதி வீரமணி, விளையாட்டுத்துறையில் பயிற்சிகளை மேற்கொள்ள இந்த பணி உயர்வு உதவியாக அமையும். பதவி உயர்வு பெற்ற வீரமணி ரேவதிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலைகோட்ட ஊழியர் நல அதிகாரி ச.சுதாகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

IND VS ENG; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இந்தியா

Jayapriya

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை

Halley Karthik

தமிழகத்தில் தரமற்ற சானிடைசர் விற்பனை: தண்டனை என்ன தெரியுமா?

Ezhilarasan