வீட்டுக்குள் புகுந்து நடிகையிடம் கத்திமுனையில் கொள்ளை

நடிகையின் வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த கும் பலை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் (Alankrita Sahai). இவர் சண்டிகரில் வசித்து வருகி றார்.…

நடிகையின் வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த கும் பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் (Alankrita Sahai). இவர் சண்டிகரில் வசித்து வருகி றார். கடந்த பத்து நாட்களுக்கு முன் இவர் பெற்றோர் வெளியூர் சென்றனர். இந்நிலையில் வேலைக்காரப் பெண் வருவதற்காக, வீட்டின் வாசல் கதவைத் திறந்து வைத்திருந்தார், அலங்கிரிதா.

அப்போது திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி நடிகையிடம் ஏடிஎம் கார்டை பறித்தனர். பிறகு, பின் நம்பரை வாங்கிக்கொண்டனர். ஒருவன் அருகில் உள்ள ஏடிஎம் மையம் சென்று 20 ஆயிரம் ரூபாயை எடுத்து வந்தான்.

பிறகு மீண்டும் பணம் கேட்டுள்ளனர். நடிகை, பயத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.6 லட்சத் தை அவர்களிடம் வீசிவிட்டு, பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். அந்த பணத் தைக் கைப்பற்றிய அவர்கள், அங்கிருந்து உடனடியாக தப்பியோடினர். போலீசில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

நடிகை, சில நாட்களுக்கு முன், பர்னிச்சர்களை வாங்கி இருக்கிறார். அதை வீட்டுக்கு கொண்டு வந்தவர்களில் ஒருவன், கொள்ளையடித்த கும்பலில் இருந்ததாக அவர் தெரிவித் துள்ளார். இதையடுத்து குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.