பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட அருவருப்பாக இல்லையா? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக
நாளிதழில் செய்தி வெளியாகிள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
https://x.com/annamalai_k/status/2010958985156051094
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு இல்லையா?”
இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.







