தோனி மீண்டும் அணிக்கு திரும்பாததற்கு இது தான் காரணமா…? – வெளியான புது தகவல்…!

குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி காயம் காரணமாக நடப்பு தொடரின் எந்த போட்டியிலும் களமிறங்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்ற தோனி அவ்வப்போது பயிற்சி செய்யும் வீடியோக்களை சென்னை அணி வெளியிட்டு வந்தது. இதனால் ஓவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் தோனியின் வருகை குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தன. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்குவாரா என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

#IPL2026 | நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி…?

இந்த நிலையில் இன்று  குஜராத் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக்  ஆட்டத்தில் தோனி களமிறங்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியின்படி, தோனி இன்று விளையாடுவது சாத்தியமில்லை எனத் தெரிகிறது . உடற்தகுதி பெற்று விட்ட போதிலும் தற்போது நிலைபெற்றுள்ள அணியின் காம்பினேஷனை கலைக்க தோனி விரும்பவில்லை. அதனால் தான் அவர் தான் அணிக்கு திரும்புவதை தாமதப்படுத்துகிறார் என்று கூறப்படுகிறது.

தோனி இல்லாத நிலையிலும், சென்னை அணி ஏழு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.