ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருப்பு’. டிரீம் வாரயர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா, சுவாஸிகா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 14 ஆம் தேதி நடைபெற உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் கருப்பு திரைப்படத்தின் நான்காவது பாடல் இன்று மாலை வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கருப்பு சாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் “கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும்
“கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. @SaiAbhyankkar Goosebumps whenever I listen to it !!!🥹🔥@Suriya_offl ❤️ #Karuppu from May 14th ..!!!💥💥💥 pic.twitter.com/ow0hVNa848— RJ Balaji (@RJ_Balaji) April 28, 2026




