This News Fact Checked by ‘AajTak’
பாகிஸ்தானில் பெண்கள் பர்தாவுக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார்களா? என்ற மேற்கோளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பாகிஸ்தானில் பெண்கள் பர்தாவுக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார்களா? போன்ற கருத்துகளுடன் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பர்தா அணிந்த பெண் ஒருவர் சாலையோரத்தில் நடந்து செல்வதைக் காணலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவரது, பர்தா திறந்திருப்பதாக காணொலியில் தெரிகிறது.
இஸ்லாமாபாத்தில் உள்ள அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேண்டுமென்றே அத்தகைய பர்தா அணிந்துள்ளார் என்று பதிவின்மூலம் மறைமுகமாக தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர் வீடியோவின் தலைப்பில், “வசந்த கால விளைவு பாகிஸ்தானிலும் தொடங்கியது. இது இஸ்லாமாபாத்தின் வீடியோ” என பகிரப்படுகிறது. வைரல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
அதன் தலைப்பில் உள்ள ‘ஸ்பிரிங் எஃபெக்ட்’ அரபு வசந்தத்தைக் குறிக்கிறது. 2011 முதல் 2012 வரை பல அரபு நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டங்கள் அரபு வசந்தம் என்று அழைக்கப்படுகிறது. துனிசியா, மொராக்கோ, சிரியா, லிபியா, எகிப்து போன்ற பல முஸ்லிம் நாடுகளை அது பாதித்தது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 2022-23ல் ஈரானிலும் ஹிஜாபிற்கு எதிரான ஒரு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் இதுபோன்ற போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த வீடியோ பாகிஸ்தானில் இருந்து அல்ல, சவுதி அரேபியாவைச் சேர்ந்தது என்று ஆஜ் தக் ஃபேக்ட் செக் கண்டறிந்துள்ளது. இந்த வீடியோ மே 2023 முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு:
வீடியோவின் முக்கிய பிரேம்களைத் தலைகீழாகத் தேடியதில், இந்த வீடியோவை 5 ஜூலை 2023 தேதியிட்ட ட்விட்டர் (பதிவு) கிடைத்தது. 24 மே 2023 தேதியிட்ட டிக்டாக் பதிவிலும் இந்த வீடியோ கிடைத்தது. வீடியோ சமீபத்தியது அல்ல, பழையது என்பது தெளிவாகிறது.
வைரலான வீடியோ எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கப்பட்டது.
வீடியோவின் பின்னணியில் ஒரு கட்டிடம் தெரிகிறது. கூகுள் லென்ஸ் மூலம் இந்தப் பகுதியைத் தேடியபோது, ஒரு Facebook பதிவு கிடைத்தது. வீடியோவில் காணப்படும் கட்டிடத்துடன் நெருக்கமாகப் பொருந்திய புகைப்படம் பதிவில் உள்ளது. இது சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மேரியட் ஹோட்டல் என்று புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள Marriott Hotel பற்றி இணையத்தில் தேடியபோது, வைரல் வீடியோவில் காணப்பட்ட கட்டிடத்துடன் சரியாகப் பொருந்தக்கூடிய ‘மேரியட் எக்ஸிகியூட்டிவ் அபார்ட்மெண்ட்ஸ்’ என்ற பெயருடைய படங்கள் கிடைத்தன. இந்த புகைப்படங்களை Google Mapsல் பார்க்கலாம். ஒரு புகைப்படத்தில், இந்த கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடமும் தெரியும், இது வைரல் வீடியோவிலும் காணப்படுகிறது.
கூகுள் மேப்ஸில் Marriott Apartments என்றும் தேடப்பட்டது. அதன் காட்சியை பார்த்தபோது, அந்த வீடியோ ரியாத்தில் இருந்து வந்தது என்பது தெரிந்தது. எனினும், இந்த பெண் எந்தவொரு நோக்கத்திற்காகவும் அத்தகைய பர்தாவை அணிந்தாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதுதவிர, ஹிஜாப் அல்லது புர்கா தொடர்பாக பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த எந்த ஒரு போராட்டத்தையும் குறிப்பிடும் எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதன்மூலம், ரியாத்தின் வீடியோ பாகிஸ்தானில் இருந்து வந்ததாகக் கூறி தவறான பதிவு கூறப்படுவது தெளிவாகிறது.









