குன்னுாாில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மும்மதத்தினரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

குன்னுாாில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவாி 14 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்று சில தினங்களே இருப்பதால் மக்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னுாாில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திமுக நகர செயலாளர் ராமசாமி ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக நடந்த இந்த விழாவில் மத வேறுபாடு இன்றி இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மும்மதத்தினரும்  கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வகையான வண்ண கோலமிட்டனர். தொடர்ந்து தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளை பறைசாற்றும் விதமாக, மாணவ மாணவிகள் சிலம்பாட்டம், புலி ஆட்டம், வாள் வீச்சு, களரி உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர்.

இதில் திமுக நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் வீர விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.