மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என இணையத்தில் பரவிவரும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என்ற மேற்கோளுடன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மணிப்பூரில் நடைபெற்ற ஒரு…

Is the video circulating on the internet purporting to be a massive gathering in Manipur true?

This News Fact Checked by ‘Factly

மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என்ற மேற்கோளுடன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

மணிப்பூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் கூட்டத்தைக் காட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ (இங்கே, இங்கே) பகிரப்பட்டு வருகிறது. ”மணிப்பூரின் இந்தக் குரல் மோடி அரசாங்கத்தின் காதுகளுக்கு ஏன் எட்டவில்லை அல்லது மோடிஜி கேட்க விரும்பவில்லையா?” என்ற மேற்கோளுடன் பல படங்களைக் கொண்ட வீடியோ பகிரப்படுகிறது.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, மணிப்பூரில் இதுபோன்ற பேரணி நடத்தப்பட்டதா? என்று இணையத்தில் தேடப்பட்டது. அப்போது, ஜூன் மற்றும் நவம்பர் 2024 க்கு இடையில் மணிப்பூரில் நடைபெற்ற பேரணிகள் பற்றி சில செய்தி அறிக்கைகள் (இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே) கண்டறியப்பட்டன. இந்தச் செயல்பாட்டின் போது, ​​வைரல் வீடியோ கவனமாகக் கவனிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் வைரலான வீடியோவுடன் பொருந்தக்கூடிய காட்சிகள் எதுவும் இல்லை.

மேலும் AI-உருவாக்கிய உள்ளடக்கத்தில் பொதுவாகக் காணப்படும் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதைச் சரிபார்க்க, AI உள்ளடக்கத்தைக் கண்டறியும் கருவியான Hive Moderation மூலம் வைரல் வீடியோ சரிபார்க்கப்பட்டது. Hive Moderation இன் பகுப்பாய்வு அறிக்கை வைரல் வீடியோவில் 99.8% AI (காப்பக இணைப்பு ) பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக காட்டுகிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து இணையத்தில் ஒரு தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. அப்போது அதே வீடியோவைக் கொண்ட Instagram பதிவு (காப்பக இணைப்பு) கண்டறியப்பட்டது. இந்த வீடியோவை 1 பிப்ரவரி 2024 அன்று  மனப் ஜோதி கோகோய் என்ற ‘டிஜிட்டல் வீடியோ கிரியேட்டர்’ வெளியிட்டுள்ளார். பதிவின் விளக்கத்தில், வீடியோவில் காணப்படும் அனைத்து படங்களும் AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்று கோகோய் பதிவிட்டுள்ளார்.

மேலும், அதேபோல் AI-உருவாக்கிய பல வீடியோக்களும், படங்களும் கோகோய் தனது வலைதள பக்கத்தில் (இங்கே) பகிர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. இதன்மூலம், வைரலான வீடியோ மணிப்பூரில் நடைபெற்ற உண்மையான பேரணியின் காட்சிகளை சித்தரிக்கவில்லை, ஆனால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்களைக் கொண்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

முடிவு:

வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள படங்கள் AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது எனவும், சமீபத்தில் மணிப்பூரில் நடைபெற்ற உண்மையான பேரணியின் காட்சிகள் வீடியோவில் காட்டப்படவில்லை எனவும் தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.