கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா 20 லட்ச நிவாரனம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் 10 லடசம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே தவெக தலைவர் விஜய் 2026-ஆம் ஆண்டு சட்டமனற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இந்த நிலையில் அண்மையில் கரூர் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்ப 31 குடும்பங்களை சார்ந்த தலா ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிகான அரசாணை வழங்கினார்.
இதனை எதிர்த்து அன்றைய தினமே சென்னை சூளையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் அளித்த அரசாணை தற்காலிகமானது என்றும் முதல் மாத ஊதியம் வழங்குவதற்குள் வழக்கு விசாரிக்கப்பட்டு திர்ப்பளிக்கப்படும் என்றும் உயர்நீதி மன்றம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலியில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட பின் கருர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 31 குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசுப் பணிக்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.




