கோவை விமான் நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ராமதாஸ், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அண்ணாவை மறந்து விட்டதாக விஜய் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இரண்டு கட்சிகளும் மறந்து விட்டனர். அம்மாவை மறந்தார்கள். தலைவர்களை மறந்தார்கள். அண்ணாவை மறந்தார்கள் அதான் வெளியே வந்தேன்.
வளர்த்து விட்டவர்களை மறக்ககூடாது. என்னை பொறுத்த வரை தலைவர் தலைவியோடு பயணம் செய்தவன் சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன் என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வார்கள் என்றால் உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என நினைத்தார். இப்போது சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.
எம்ஜிஆர் கட்சி துவங்கிய போது இது போல் விமர்சனங்கள் எழுந்தது, அவர் உயிருள்ள வரை முதல்வராக இருந்தார். பொதுவாக பலமுனை தாக்குதல் என்பது மாபெரும் வெற்றியை அடைய போகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதிமுக அமைச்சர்கள் ஐடி விங்கை பொறுத்தவரையில் திமுக மீது உள்ள குற்றச்சாட்டை வெளிப்படுத்த வேண்டுமே தவிர இவர்கள் திமுகவின் பி டீமாக உள்ளார்கள். புதிய கட்சியை விமர்சிப்பது, குற்றச்சாட்டு சொல்வது, எதிர்கட்சி நடைமுறையில் ஒன்று இது வேதனை அளிக்க கூடியது என்று தெரிவித்துள்ளார்.







