நாமக்கல் – திருச்சி சாலையில் சமையல் எண்ணெய் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்றுள்ளது. அப்போது எதிர்புறத்தில் சாக்கு பை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பின்னால் வந்த இருச்சக்கர வாகனத்தின் மீது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த கணேசபுரத்தை சேர்ந்த கார்த்திக், ஜெய்நகரை சேர்ந்த சேனாதிபதி மற்றும் கர்நாடகவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







