குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டும்…

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டும் நடைமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;

“கொரோனா தொற்று பாதிக்கப்பட குழந்தைகளுக்கு பரிசோதனையின் வாயிலாக லேசான அறிகுறி என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிகலாம். வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக மருத்துவர்களின் ஆலோசைனியின் படி சிகிச்சை அளிக்க வேண்டும்.

தீவிரமான தொற்று அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தொற்று தடுப்புக்காக ரெம்டெசிவிர் மருந்தை குழந்தைகளுக்குத் தரக் கூடாது. அதே போல குழந்தைகளின் பாதிப்பு தன்மையை அறிய சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளக் கூடாது.

5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் தொற்று பாதிப்பு தன்மை அடிப்படையில் முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.”

இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.