ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, வரும் 21ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தினை அனுமதிப்பது குறித்து, ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதேபோல் வழிபாட்டுத் தலங்கள், சிறிய அளவிலான துணிக்கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகங்களை திறக்க அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.







