கே.பி.முனுசாமி ரூ.1 கோடி டீலிங் உண்மையா?: கே.டி.ராஜேந்திர பாலாஜி சொன்ன தகவல்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மை என்றும், ஆனால் எம்எல்ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார் என்பது உண்மையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல்…

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மை என்றும், ஆனால் எம்எல்ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார் என்பது உண்மையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் தினசரி சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த நிலையில் பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயரை தரிசிப்பதற்காக அமைச்சர் கேபி கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில், மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி, கட்டுமானம் உள்ளிட்டை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக தான் உள்ளனர். இது எம்.பி தேர்தலிலும் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

மேலும் கே.பி.முனுசாமி ஆடியோ விவாகாரம் தொடர்பாக பேசிய அவர், அரசியலில் கொடுங்கல் வாங்கல் சகஜம், இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம், அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை என்று கூறினார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.