முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

உருமாறிய டெல்டா வகையை எதிர்க்க கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸை எதிர்த்து போராட ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசிகளோடு கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பல பகுதிகளில் குறிப்பிட்ட மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இயற்கையான முறையிலேயே நோயை குணப்படுத்தலாம், பாரம்பரிய முறையிலான மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். நவீன கால மருந்துகள் எதிர்காலத்தில் உடல்நிலையை பாதிக்கும் போன்ற சமூகவலைதளங்களில் பரவும் தவறாக கருத்துக்களால் பலர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை.

இப்படி இருக்கும் சூழலில் கொரோனா வைரஸின் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலக நாடுகளை எல்லாம் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசியால் டெல்டா வகை கொரோனாவை எதிர்க்க முடியுமா என்ற சந்தேகம் மக்களுக்கு மட்டுமில்லாமல் மருத்துவ மற்றும் நோய் தொற்றை கையாளும் நிபுணர்களுக்கும் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களில் சிலர் ஏற்கெனவே கூடுதலாக ஒரு முறை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக இந்த சந்தேகம் அமெரிக்காவில் உள்ள நிபுணர்களுக்கு ஏற்படுள்ளது. அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 56% மகக்ளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனாலும் உருமாறிய டெல்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும், அதனுடைய தாக்கம் பழைய முந்தைய அலையில் இருந்த பாதிப்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால், கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு பயன்படுத்தப்படும் மார்டனா (MRNA), பைஸர் (Pfizer), ஆஸ்ட்ரா சென்கா (Astrazenca) ஆகிய தடுப்பூசிகளால் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஆற்றலோடு செயல்பட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளையில் அமெரிக்காவை மையமாக கொண்ட ஜெ&ஜெ (Jhonson&Jhonson) நிறுவனம் தயாரித்த தடுப்பூசியால் டெல்டா வகை வைரஸை எதிர்த்து போராட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஜெ&ஜெ தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்கள் கூடுதலாக வேறு ஒரு தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்வதைப் பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஜெ&ஜெ நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எதிராக சந்தேகம் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது, அதன் செயல்திறனே. மார்டனா நிறுவனத்தின் தடுப்பூசிகள் 95% பாதுகாப்பானது என ஆய்வில் முடிவு வந்தநிலையில் ஜெ&ஜெ தடுப்பூசி 66% மட்டுமே பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசியால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய வைரஸ்களை எதிர்த்து ஒருவரின் உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் குறைவு எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் லின் கூறும்போது, ஜெ&ஜெ தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு, வைரசுக்கு எதிராக குறைவான பாதுகாப்பே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் வேறு ஒரு தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கியுள்ளார்.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் நிபுணரான மருத்துவர் ஜேஸன் கல்லாஹர் கடந்த நவம்பர் மாதம் ஜெ&ஜெ தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நிலையில் சமீபத்தில் பைஸர் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து அவர்கூறும்போது, ஒருமுறை மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு உருமாறிய டெல்டா வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற இங்கிலாந்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.

தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் குறித்து ஜெ&ஜெ கூறும்போது, உருமாறிய டெல்டா வகை வைரஸ்களை எதிர்த்து ஜெ&ஜெ எந்த அளவிற்கு போராடும் என்பதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும், அது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எந்த ஆய்வு முடிவும் வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

சாஸ்காட்ச்வென் பலகலைக்கழகத்தில் ஆராய்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் ஏஞ்சலா ராஸ்முஸென் ட்விட்டரில், “நான் ஏற்கெனவே ஜெ&ஜெ தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன் ஆனால் சமீபத்தில் மீண்டும் பைஸர் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டே” என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி நிபுணர் மருத்துவர் பீட்டர் ஹோட்ஸ் கூறும்போது, ஜெ&ஜெ தடுப்பூசியை இரண்டாவது முறையாக எடுத்துக்கொள்வதோ அல்லது, வேறு ஒரு தடுப்பூசியை எடுத்துக்கொள்வதோ கூடுதல் பாதுகாப்பை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலோடு அதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

Halley karthi

போலீசார் மீது சாக்கடைக்கழிவு வீச்சு: வீடியோ வைரல்

Vandhana

விலக்கு பெறும் வரை நீட் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jeba Arul Robinson