முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காக்கா தோப்பு பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி

ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜியை ஜூன் 12 ஆம் தேதி விழுப்புரம் அருகே காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவருடைய கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

எலும்பு முறிவிற்கு அறுவை சிகிச்சை வழங்க கோரி, அவருடைய தாய் கண்மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், பாலாஜிக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களுக்காகவும், கொரோனா தொற்றுக்காகவும் சிகிச்சை முடிந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டுள்ளது எனவும் கூறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!

Halley karthi

நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Gayathri Venkatesan

தமிழக – கேரள எல்லையில் இ.பாஸ் நடைமுறை அமல்!

Halley karthi