உருமாறிய டெல்டா வகை வைரஸை கட்டுப்படுத்துமா தடுப்பூசி?

உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களை தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளால் கடுப்படுத்த முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு உலக சுகாதாரஅமைப்பு மற்றும் தடுப்பூசி நிறுவனங்கள் ஆகியவை விளக்கமளித்துள்ளன.…

உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களை தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளால் கடுப்படுத்த முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு உலக சுகாதாரஅமைப்பு மற்றும் தடுப்பூசி நிறுவனங்கள் ஆகியவை விளக்கமளித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளின் செயல் திறனின் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில் மீண்டும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

COVAXIN & COVISHIELD

கோவாக்சின் & கோவிஷீல்ட்

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளால் உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை சதவீதம் பாதுகாப்பாக இருக்கும், எந்த அளவிற்கு டெல்டா வைரஸ்களை எதிர்த்து எதிர்ப்பு சக்தியோடு போராடும் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் வி (Sputnik V)

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு தற்போது இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது அனைத்து வகை கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக சக்தி வாய்ந்ததாக செயல்படும் என ஸ்புட்னிக் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான அலெக்ஸாண்டர் கின்ட்ஸ்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தியவுடன் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியால், இங்கிலாந்தில் உருமாறிய வைரஸ் முதல் சமீபத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் வரை அனைத்து வகையான வைரஸ்களையும் எதிர்த்து போராடும் செயல்திறன் கிடைத்துவிடும் என தெரிவித்தார்.

பைசர் (PFizer)

இந்தியாவிற்கு விரைவில் வரவிருக்கக்கூடிய பைசர் தடுப்பூசியும் உருமாறிய கொரோனா வைரஸ்களை எதிர்த்து போராடக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுபவர்களும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக்கூடாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உருமாறிய டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக எந்த அளவிற்கு எதிர்த்து போராடும் என்ற விவரங்கள் ஆவின் அடிப்படையில் இன்னும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.