பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? – பாஜக மாநில தலைவர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலைய பூட்டை உடைத்து…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலைய பூட்டை உடைத்து உள்ளே சென்ற வழக்கில் கைதான நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கத்தை இன்று தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மாஜிஸ்திரேட் பிரவீனா நேரில் சந்தித்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.

இதனை அடுத்து ஆகஸ்ட் 29 வரை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பி.ராமலிங்கத்தை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய போலீசார், அவர் உடல் நலம் பெரும் வரை போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து ட்வீட்டரில் கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

அண்மைச் செய்தி: ‘குட்டிக் கரணம் போட்ட குட்டி யானை!’

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதைக் குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்ச மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

குடும்ப ஆட்சியின் அடுத்த பரிமாணமே சர்வாதிகாரம் எனத் தெரிவித்துள்ள அவர், உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், எங்களைத் துன்புறுத்தலாம். உங்கள் அடக்குமுறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.