அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “உலகத்தில் மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி, உலகத்தில் மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி, என்னுடைய அருமை சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன், குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள். புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் தற்போது வரை பேசவில்லை. வழக்கமான கட்சி ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை ராஜினாமா கடிதம் என்னிடம் வரவில்லை. அண்ணாமலை இதுவரை அதைப் பற்றி எதுவும் என்னுடன் பேசவில்லை. குடும்ப விஷயங்கள், மற்ற விஷயம் பேசி இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 23 நாட்களில் 25 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. கஞ்சா விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. 15க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. வாக்களித்த மக்களுக்கு என்ன செய்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து நடந்துக்கொள்வதாக தெரியவில்லை.


சிறுபான்மை அரசா, சிறுபான்மையினருக்கான அரசா என்பதை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும். கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட்டிஸ்க்கு கானாமல் போயுள்ளது. ஒப்பந்தத்தில் 400 கோடி ஊழல் நடந்துள்ளது. விஜய் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து தவறி விட்டார். திமுகவோடு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகள் பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைச்சரவையில் பங்கு பெற்றிருப்பது சந்தர்ப்பவாதம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.