இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 2024 டி 20 உலகோப்பை வெற்றிக்கு பின் இருபது ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து அவர் 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
தற்போது விராட் கோலி ஒரு நாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
அதன் படி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான் இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிகெதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கோலிக்கு தொடைப் பின்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.







