அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய் ஆண்டனி?..

“அரசியலுக்கு வரும் எண்ணமிலை, எல்லோரும் ஆசைப்பட்டால் முயற்சி செய்து பார்க்கலாம்” என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில்…

“அரசியலுக்கு வரும் எண்ணமிலை, எல்லோரும் ஆசைப்பட்டால் முயற்சி செய்து பார்க்கலாம்” என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் விஜய் ஆண்டனி, திரைப்படத்தில் நடித்த நடிகை மிருணாளினி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது, தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள
வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி,

“எல்லோருக்கும் ஓட்டு போட உரிமை உண்டு. ஆனால் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என யோசித்து போடுங்கள். என்னை பொருத்தவரை நோட்டாவுக்கு நான் ஓட்டு போடுவதில்லை. ஒஸ்ட்டில் யார் பெஸ்ட் என அரை மணி நேரம் யோசித்து நீங்கள் வாக்களியுங்கள்” என கூறினார்.

மேலும் நீங்கள் வரும் காலத்தில் அரசியலுக்கு வர ஆசை உள்ளதா என கேட்கப்பட்ட
கேள்விக்கு,

“எனக்கு ஆசை இருக்கா என்பதை விடுங்கள். உங்களுக்கு நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளதா? உங்களுக்கு ஆசையாக இருந்தால் நான் அரசியலுக்கு வர தயார்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.