ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழப்பு!

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் வீரபத்திரன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு குடியாத்தம்…

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் வீரபத்திரன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு குடியாத்தம் அடுத்த தங்க நகர் பகுதியைச் சேர்ந்த காவியா (18), ப்ரீத்தி (17), லலிதா (28), ராதா ( 50) ஆகிய நால்வரும் சாமி கும்பிட சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடித்த பின் அருகில் உள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது ஏரியில் மூழ்கி நால்வரும் உயிரிழந்துள்ளனர்.

முதலில் இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் தீவிரமாக மற்ற இருவரின் உடலை தேடி வந்தனர். பின்னர் மற்ற இருவரின் உடல்களும் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது.

இதில் ப்ரீத்தி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். காவியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். ராதா என்பவரின் மகளே லலிதா ஆவார். இவர்களின் எதிர் வீட்டைச் சேர்ந்தவர்களே காவியா, ப்ரீத்தி. ஒரே பகுதியைச் சேர்ந்த இந்த நான்கு பேரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.