எலி, தெனாலி ராமன் எடுத்த யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த் மற்றும் அபர்ணதி நடிப்பில் உருவாகி உள்ள இறுகப்பற்று படம் எப்படி உள்ளது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜோடிகள்
விக்ரம் பிரபு – ஷ்ரத்தா
விதார்த் – அபர்ணதி
ஸ்ரீ – சானியா ஐயப்பன்
படத்தின் கதை
திருமணத்திற்கு பிறகு மனைவி மேல் காதல் இல்லை என்றும் தனது கணவனை கண்டாலே பிடிக்கவில்லை என்றும் எனது மனைவி முன் போல அழகாக இல்லை என்றும் குற்றம் காட்டி பிரச்னைகள் ஏற்படும் தம்பதிகள் சைக்காட்ரிஸ்ட்டாக வரும் ஷ்ரத்தாவை சந்திக்கிறார்கள். இவர்களின் கதைகளை எல்லாம் கேட்க தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்பட்டு விடுமோ என்று வாரத்தில் ஒரு தெரப்பி கிளாஸ் என்று விக்ரம் பிரபுவிற்கு பாடம் எடுகிறார் ஷ்ரத்தா. இப்படி போய் கொண்டிருக்கும் கதையில் டச்சிங்கான வசனங்கள், விட்டு கொடுக்கும் தன்மை என பல்வேறு விசயங்களால் ஏற்படும் சண்டைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குநர் யுவராஜ்.
விதார்த் – அபர்ணதி ஜோடி
ஐடியில் வேலை பார்க்கும் விதார்த் மற்றும் அபர்ணதி தம்பதியினர் திருமணம் ஆன நிலையில், அபர்ணதிக்கு குழந்தை பிறக்கிறது. பிறகு அவரது உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறார். மேலும், அவர் பேசும் போது வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்கிற புகார்களுக்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார் விதார்த்.
ஸ்ரீ – சானியா ஐயப்பன் ஜோடி
காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இளம் ஜோடிகளான ஸ்ரீ மற்றும் சானியா திருமணத்துக்கு பிறகு ஏற்படும் பிரஷர் காரணமாக தங்கள் காதலையே மறந்து விட்டு பிரிந்து விடும் எண்ணத்தில் இருக்கின்றனர்.
இசை
பெரிதுமாக நிறையப் பாடல்களால் நிரம்பியிருக்கின்றன. கார்த்திக் நேத்தா வரிகளில் கிறிஸ்டோபர் ஸ்டான்லி மற்றும் பத்மபிரியா ராகவன் குரலில் ஒலிக்கும் ‘மாயா மாயா’ பாடல் ரசிக்க வைத்து ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. முதற்பாதியில் வரும் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்தோடு தொல்லை தராமல் வந்து போகிறது. பின்னணி இசையில் கதைக்குத் தேவையான இசையை கொடுத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.
இந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும்?
காதல், எமோசன்ஸ், விட்டுகொடுப்புத் தன்மை, அனுசரிப்பு, Possesiveness என அனைத்து வகையாக காட்சிகளையும் நம் கண்முன்னே நிறுத்தியுள்ளது இந்த படம். இந்த படத்தில் வரும் சில காட்சிகள் தாம்பத்திய வாழ்க்கையை தாண்டி நண்பர்களுக்கும் ஏற்ற படமாகவே உள்ளது. யார் இந்த படத்தை பார்த்தாலும் இந்த மாதிரியான ஈகோ விசயங்களை நாமும் நம் வாழ்க்கையில் செய்திருக்கிறோம் என்று தோன்ற வைக்கிறது. உடனடியாக ஒரு சாரியாவது கேட்கனும் அந்த நபரிடம் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இந்த படம் முடித்து வெளியே வரும் போது ஒரு 10 நிமிடங்கள் ஆவது படத்தை பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம். நல்ல ஒரு படம் ஒவ்வொரு காட்சிகளும் நம்மோடு உறவாடுகிறது. நல்ல ஒளிப்பதிவு, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துகள்.







