ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு….? திரைவிமர்சனம்…!

‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ என்ற ஸ்பூஃப் வகை படங்களை எடுத்த சி.எஸ்.அமுதன் முதன்முறையாக க்ரைம் ஜேர்னரில் களமிறங்குகிறார். நகைச்சுவை பாணியில் எடுத்த படங்கள் அவருக்கு கைகூடியதை போல் க்ரைம் ஜேர்னர் கைகூடுமா…

‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ என்ற ஸ்பூஃப் வகை படங்களை எடுத்த சி.எஸ்.அமுதன் முதன்முறையாக க்ரைம் ஜேர்னரில் களமிறங்குகிறார். நகைச்சுவை பாணியில் எடுத்த படங்கள் அவருக்கு கைகூடியதை போல் க்ரைம் ஜேர்னர் கைகூடுமா என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

மனைவி இறந்த பிறகு கொல்கத்தாவில் தனது மகளுடன் வசித்து வருகிறார் முன்னாள் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் விஜய் ஆண்டனி. சென்னையில் உள்ள அவரது நண்பர், மர்ம நபர் ஒருவரால் பத்திரிகை அலுவலகத்திலேயே கொடூரமாக கொல்லப்படுகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல நபர்கள் மர்ம நபர்களால் கொள்ளப்படுகிறார்கள். இதனால் தனது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகை நிறுவன அதிபருமான நிழல்கள் ரவியின் வேண்டுகோளின்படி மீண்டும் சென்னைக்கு வருகிறார்.

பிறகு, இந்த கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்குகிறார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அவர்கள் யார், எந்த நோக்கத்தில் கொலை செய்கிறார்கள் எதற்காக கொலை செய்கிறார்கள் என்பதை அறிந்து விஜய் ஆண்டனி தனது தொலைக்காட்சி மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

க்ரைம் சம்பந்தமான கதை என்றால் போலீஸ் இன்வெஸ்டிகேசன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இங்கு கதையே வேறு ஒரு பத்திரிக்கைக்காரர் எந்த அளவுக்கு ஆராய்ந்து மக்களுக்கு செய்தியை கொண்டு போய் சேர்க்கிறார் என்ற வலியை இப்படம் பேசியுள்ளது.

படத்தில் உள்ள மிஸ்ஸிங்

பத்திரிக்கை அலுவலகத்துக்குள் அந்நிய நபர்கள் நுழைவது என்றால் அது ரொம்ப ஈசியான விஷயம் இல்லை. ஆனால் இந்த படத்தில் துணி கடைக்கு எவ்வளவு ஈசியாக நுழையலாமோ அந்த அளவுக்கு ஈசியாக பத்திரிக்கை அலுவலகத்திற்குள் நுழைகிறான் கொலைகாரன். மேலும், விஜய்ஆண்டனி வேலையை விட்டு போன பிறகு வேறு யாரையும் அந்த பதவியில் அமர வைக்காமல் எம்ட்டியாகவே இருந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே அலுவலகத்தில் விஜய்ஆண்டனி ரீஜாய்ன் செய்யும் போது தான் அந்த அறை திறக்கப்படுகிறது. படம் என்பதால் உருட்டலாம், ஆனால் இந்த அளவுக்கு உருட்டக் கூடாது.

அதே மாதிரி காட்சிக்கு காட்சி விஜய் ஆண்டனி ஒரு பேமஸ் ஜர்னலிஸ்ட் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் பேமஸ் ஆகும் அளவிற்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. படத்திலும் அதை பற்றிய காட்சிகளை காட்ட வில்லை. விறுவிறுப்பான காட்சிகள் இல்லை. ப்ர்ஸ்ட் ஆப் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. இரண்டாம் பாதியில் வரும் குதிரைக்காட்சி தேவையே இல்லாத காட்சியோ என்று தோன்ற வைக்கிறது.

நடிகர்கள், இசை

விஜய் ஆண்டனி இதுவரை மற்ற படங்களில் எப்படி நடித்தாரோ, அப்படியே இதிலும் சீரியஸான முகத்துடன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நடித்திருக்கிறார். நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், நிழல்கள் ரவி என யாருடைய கதாபாத்திரமும் ஆழமாக எழுதப்படவில்லை. கண்ணனின் பின்னணி இசையும், பாடல்களும் ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளில் தொய்வு, ரத்தம் என்ற தலைப்புக்கும் படத்தில் உள்ள கதைக்கும் சமந்தம் இல்லாத கதை என எதிர்ப்பார்த்ததை வெறுமை ஆக்கிவிட்டது. இந்த ரத்தம் எந்த Blood Group என்று சொல்ல முடியவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.