கொரோனா தடுப்பு மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
கொரோனா 3வது அலை ஆகஸ்ட் இறுதியில் வர வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. கொரோனாவின் இரண்டவாது அலைக்கு டெல்டா வைரஸ் காரணமாக இருந்தது. இந்நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக அமையலாம் என்றும் மேலும் இது குழந்தைகளை பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனாவின் முதல் அலை நடுத்தர வயதினரையும் முதியவர்களையும் பாதித்தது. கொரோனாவின் இரண்டாவது அலை இளஞர்களை அதிகமாக பாதித்தது. இதனால் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கொரொனா தொற்றின் பரவலோடு, மழைக்காலம் சேர்ந்துகொள்வதால் இதை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்க வாய்ப்பிருப்பதால், தமிழ்நாட்டு அரசு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தீவிரமான திட்டமிடலில் இறங்கி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில், தொற்று உள்ளவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துவது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் கூறியிருந்தார். அவற்றை தீவிரமாக செயல்படுத்தும் விதமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இதில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விவசாய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.