அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் இன்று தவெக ஆலோசனை கூட்டம்…!

தவெகவின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகள் வெற்றி பெற்ற தவெக பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து 35 பேர் கொண்ட அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அதிமுக மற்றும் பிற கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை தவெகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தவெகவின் வளர்ச்சிப் பணிகள் பற்றியும் கட்சியில் புதிதாக இணைந்துள்ள நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்குவது குறித்தும்
ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.