முக்கியச் செய்திகள் தமிழகம்

12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவர்கள் குஷி

12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை வேகமாக பரவியதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இருப்பினும் கொரோனா பரவல் குறையாததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் இணையம் வாயிலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 12ம் வகுப்பு பொதுதேர்வை ரத்து செய்ய அதிகமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதையடுத்து, 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததுடன் 10 மற்றும் 11ம் வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் பின்வரும் இணையதளத்தில் வெளயிடப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in,
http://www.dge1.tn.nic.in,
http://www.dge2.tn.nic.in,
http://www.dge.tn.gov.in

மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது முடிவுகளை அறியலாம். மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 22-ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அண்ணாமலையைப் புகழ்ந்த வானதி சீனிவாசன்

Web Editor

நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் – வைரலாகும் வீடியோ

Web Editor

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Saravana