கோவை, திருப்பூர் நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…!

கோவை, திருப்பூர் நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 59 தொகுதிகளை மட்டுமே வென்ற திமுக ஆட்சியை இழந்து எதிர்கட்சியானது. இதனை தொடர்ந்து அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுக்களை அமைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தினந்தோறும் பல்வேறு மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் அலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கோவை திருப்பூர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் தோல்விக்கான காரணம் குறித்தும், தோல்வி அடைந்த தொகுதிகளில் களப்பணிகள் குறித்தும் கேட்டறிய உள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.