16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்திருப்பதாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் 16 வயது சிறுமியை உடனடியாக மீட்டனர். விசாரணையில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிறுமியின் உறவினரான வாய் பேச முடியாத அகிலகுண்ட ரமேஷ் என்பருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
மாவட்ட சமூக நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மணமுடித்த இளைஞர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்







