ஜூனியர் ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவிப்பு!

இந்திய அணி 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் லக்சயா ராஜேஷ் ராய்சந்தானி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆர்யவீர் சேவாக் 22 ரன்களும், வி.கே. வினீத் 8 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.