”குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…!

குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளர் செந்தமிழனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ;

“திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் சட்டமன்றத்தில் வாய்மூடி அமைதியாக இருந்ததால், அவர்களின் செல்வாக்கு குறைந்தது. மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் செல்வாக்கை இழந்தது.

தமிழ்நாட்டில் நடக்கும் பல குற்றங்களில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர். போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் முழுமையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக அரசு” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.