#IPL2026 | டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணி 16.3 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தேல் களமிறங்கினர். இறுதியில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. கோலி 23(15) ரன்களுடனும் படிக்கல் 34(13) ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் ஜெமிசன் 1 விக்கெட் எடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.