தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

தமிழ்நாடு அரசானது 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு அரசானது 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

  1. பெருநகர சென்னை காவல்துறையின் நலன் மற்றும் எஸ்டேட் ஆணையராக இருந்த கண்ணன், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு ஆணையரகத்தின் துணை காவல் ஆணையராக இருந்த வேல்முருகன், காவல் படைத் தலைவர் அலுவலகத்தின், நவீனமயமாக்கல் பிரிவு உதவி காவல் தலைவராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் (கட்டாய காத்திருப்பு), வேல்முருகனுக்குப் பதிலாக, தாம்பரம் காவல் ஆணையரகம், மத்திய குற்றப்பிரிவு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. காவல் கண்காணிப்பாளர் டி.ரமேஷ் பாபு (கட்டாய காத்திருப்பு), சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவல் கண்காணிப்பாளராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. காவல் கண்காணிப்பாளர் கிதாஞ்சலி (கட்டாய காத்திருப்பு), பெருநகர சென்னை காவல் துறையின், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் (கட்டாய காத்திருப்பு) , பெருநகர சென்னை காவல் துறையின், பாதுகாப்புப் பிரிவு துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படை காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரமேஷ், திருப்பூர் மாநகர, வடக்கு மண்டல துணை காவல் ஆணையராக தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. தமிழ்நாடு கமாண்டோ படையின் காவல் கண்காணிப்பாளரான கே.மகேஸ்வரி, ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் வட்டார துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. கோயம்பேடு வட்டார துணை காவல் ஆணையர் ஆர். உதயகுமார், ஏ.சி. கார்த்திகேயனுக்குப் பதிலாக திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. ஏ.சி.கார்த்திகேயன், பெருநகர சென்னை காவல் துறையின், அடையார் வட்டார துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஸ்ரோதே, பதவி உயர்வு பெற்று, ஆர்.உதயகுமாருக்குப் பதிலாக கோயம்பேடு வட்டார துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  12. நாமக்கல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி, பதவி உயர்வுப் பெற்று, திருப்பூர் மாநகரம், தெற்கு மண்டல துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகரம், மேற்கு மண்டல துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புத், பதவி உயர்வு பெற்று, சென்னை, குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி) வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  15. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பானவத் அரவிந்த் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகரம், வடக்கு மண்டல துணை காவல் ஆணையராக, தற்போது காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.