ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி தான் ஆடியுள்ள 8 போட்டிகளில் 6 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் குஜராத் அணி 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.







